டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொச்சியில் பிரம்மபுரம் பகுதியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து ஒருவார போராட்டத்திற்கு பிறகு 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டாலும், அதனால் எழுந்த புகைமூட்டம் கொச்சி நகரில் வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் கொச்சியை விட்டு வெளியூரில் உள்ள தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த புகை குறித்து ஆராய்ந்த மருத்துவ வல்லுனர்கள் இந்த புகைமூட்டம் அடங்குவதற்குள்ளும், அடங்கிய பின்னாலும் கூட பொதுமக்களில் பலருக்கு பல வகையான தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு என்று எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் மம்முட்டி மேற்கொண்டு இன்னும் கொச்சியை மூச்சு திணற வைக்காதீர்கள் என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த விபத்து நடந்த சமயத்தில் நான் புனேயில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தேன். அதன்பிறகு கேரளாவில் நடைபெறும் இன்னொரு படத்தின் படப்பிடிப்பிற்காக நான் கொச்சி திரும்பிய அன்றைய தினமே எனக்கு இருமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மறுநாள் காலையிலேயே வயநாடு பகுதியில் நடக்கும் படிப்பிடிப்பிற்காக கிளம்பிச் சென்ற பின் தான் என்னால் ஓரளவு சீராக மூச்சு விட முடிகிறது.
இந்த தீ விபத்துக்காக அரசாங்கத்தை மட்டுமே குறை கூற முடியாது. கழிவுகளை தரம் பிரித்து சரியான முறையில் கையாள முயற்சிக்காத பொது மக்களாகிய நாமும் கூட இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது இதுபோன்று நிகழாமல் விழிப்புணர்வுடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனியும் கொச்சியை மூச்சு திணற வைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.