மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் இயக்கம், மற்றொரு பக்கம் பின்னணிபாடுவது என, பலமுகம் காட்டி வருகிறார் சிம்பு. தன் நண்பர்களுக்காக மட்டுமின்றி, யார் அழைத்தாலும் தவிர்க்காமல் பாடிக் கொடுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது பாடல்கள் எழுதி வரும் சிம்பு, சமீபத்தில் வெளியிட்ட, இசை ஆல்பம், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களை சென்றடைந்தது மட்டுமல்லாது, அண்டை மாநில சினிமாக்காரர்கள் மத்தியிலும், சிம்புவின் புகழ் பாடியுள்ளது.அதன் காரணமாக, தற்போது தெலுங்கு பட ஹீரோக்களும், சிம்புவை பின்னணி பாட அழைத்து வருகின்றனர். அதனால், இனி தன்னை விரும்பி எந்த மொழியில் பாட அழைத்தாலும், பாடிக் கொடுக்க தயாராகி வருகிறார் சிம்பு.