பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
‛துணிவு' படத்திற்கு பின் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் விலகி கொள்ள, தற்போது இயக்குனர் மகிழ்திருமேனியின் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்தபடம் உறுதியாகிவிட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழுவினர் வெளியிடாமல் உள்ளனர். ஒருவாரத்திற்குள் அஜித் 62 படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்தாண்டு ‛துணிவு' படத்தில் நடித்து வந்தபோது பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் அஜித். அதன் ஒரு பகுதியாக இந்திய பயணத்தை முடித்துவிட்டார். அஜித் 62 படத்தை முடித்ததும் மீண்டும் தனது பைக் சுற்றுபயணத்தை துவங்க உள்ளார். இந்நிலையில் இந்த பயணத்திற்கு ஒரு பெயர் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர் வெளியிட்ட பதிவு : ‛‛லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2வது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.