Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்த மழையில் நனைந்த அல்லு அர்ஜுன்-அமலாபால்

24 பிப், 2013 - 12:50 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி கட்டி பவ்யம் காட்டும் அமலாபால், அக்கட ஆந்திரா தேசத்தில் படு கவர்ச்சி நாயகியாக ஆட்டம்போடுகிறார். கோடி ரூபாய் சம்பள நடிகை லிஸ்ட்டில் சேர்ந்து விடவேண்டும் என்பதற்காக எத்தகைய காட்சிகளிலும் நடிக்கத் தயார் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார். பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் "இத்தரம்மாயிலதோ" என்ற படத்தை இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுன் ஹீரோ, அமலாபால் ஹீரோயின்.

இந்தப் படத்தில் மூன்று இடங்களில் லிப் லாக் முத்தக்காட்சிகள் இடம்பெறுகிறதாம். இதற்கான படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கேயே இந்த மூன்று காட்சிகளையும் எடுத்து விட இயக்குனர் பூரி ஜெகன்னாத் முடிவு செய்தார். இதனை அவர்களிடம் சொன்னபோது முதலில் தயங்கியவர் அல்லு அர்ஜுன், அமலாபால் அடுத்த நொடியே ஓகே சொன்னாராம். இயக்குனர், கேமராமேன் உள்ளிட் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு வெவ்வேறு பின்னணியில் லிப் லாக் முத்தக் காட்சிகளை எடுத்தாராம். முதல் காட்சி மட்டும் 7 டேக் வரை சென்றது என்றும், அடுத்த காட்சிகள் ஒரே டேக்கில் முடிந்தது என்றும் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். கடைசி வரை முத்தக்காட்சி படங்களை வெளியிடாமல்  திரையரங்கில் மட்டுமே அந்த காட்சிகளை காணும் வகையில் திட்டம் வைத்திருக்கிறாராம் பூரி ஜெகன்நாத்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
25 பிப், 2013 - 19:13 Report Abuse
Angry ஜெய் கண்டிப்பா கதைக்கு தேவையா இருந்திருக்கும், கண்ணகிக்கு அடுத்து அமலா பால் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in