'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! |
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 2017ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து கதிரேசன் தம்பதிகள், மதுரை ஐகோர்ட்டில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே இந்த விவகாரம் குறித்த முந்தைய வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது உடலில் மச்சங்கள், தழும்புகள் போன்றவற்றை அரசு டாக்டர்கள் சரி பார்த்தனர். அந்த சமயத்தில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளராக நான் பணியாற்றியதால் இந்த வழக்கை தொடர்ந்து நான் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு அமர்வுக்கு இந்த வழக்கை பரிந்துரைக்கிறேன். என்று கூறினார். இதை தொடர்ந்து இந்த வழக்கு வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.