படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தியேட்டர்களில் வெளியானது. சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்று படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகி உள்ளது.
தமிழில் 'வாரிசு', தெலுங்கில் 'வாரசுடு' என வெளியான படம் கன்னடத்தில் 'வாரஸ்டரா' என்றும், மலையாளத்தில் 'வம்ஷாஜன்' என்றும் வெளியாகி உள்ளது. தியேட்டர்களில் இப்படம் வெளியான போது, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகவில்லை. ஆனால், ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
'வாரிசு' தியேட்டர்களில் வெளியான போது போட்டியாக வெளியான அஜித்தின் 'துணிவு' படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது 'வாரிசு' படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளதால் இந்தப் படத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.