ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக கடந்த வாரம் வெளிவந்த படம் 'ஆன்ட் மேன் அன்ட் த வாஸ்ப் - குவான்டமானியா' படம் உலக அளவில் குறிப்பிடத்தக்க அளவில் வசூலைப் பெற்று வருகிறது.
பார் ருட், எவான்ஜலின் லில்லி, ஜோனாதன் மேஜர்ஸ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் 'மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்'ன் 5வது கட்டத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் இப்படம் அமெரிக்காவில் 120 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலையும், மற்ற உலக நாடுகளில் 359 மில்லியுன் யுஎஸ் டாலர் தொகையையும் வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 2,973 கோடி ரூபாய்.
சுமார் 200 மில்லியன் யுஎஸ் டாலர் பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளது. பட்ஜெட்டை விடவும் அதிகமாக வசூலித்து வருவதால் இந்தப் படம் லாபத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஆன்ட் மேன்' முதல் பாகம் 500 மில்லியன் யுஎஸ் டாலரும், 'ஆன்ட் மேன் 2' படம் 620 மில்லியன் யுஎஸ் டாலரும் வசூலித்துள்ளது. அந்த வசூலை 'ஆன்ட் மேன் 3' தாண்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




