ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் , சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படமும் லோகேஷ் கனகராஜின் எல்சியு படம் என்கிற தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதனால் இந்த படத்தில் கைதியில் டில்லி வேடத்தில் நடித்த கார்த்தி, விக்ரம் படத்தில் கமல் மற்றும் ரோலக்ஸாக நடித்த சூர்யா ஆகியோரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது லியோ படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மாஸ்டர் படத்தில் சந்தானமாக நடித்த விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்கிற யூகத்தை ஏற்படுத்து வகையில் அமைந்திருக்கிறது. அதில் கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கேரக்டர் அணிந்த கண்ணாடியின் ஒரு பகுதியை தனது கையில் வைத்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ஒருபோதும் இறப்பை சொல்லாதே என பதிவிட்டு இருக்கிறார்.
இதை வைத்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தான் ரத்னகுமார் மறைமுகமாக சொல்லி உள்ளார் என சில குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலரோ, ‛‛அப்போ சந்தானம் சாகல... கோட் வேர்ட் அக்சப்டட்....'' என கூறி சந்தானம் விஜய் சேதுபதியின் போட்டோக்களை பகிர்ந்து உள்ளனர்.