செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மலையாளம், தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வரும் அமலாபால், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வரும் அமலாபால், அடிக்கடி ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்த அமலா பால், மகா சிவராத்திரி அன்று இந்தோனேசியாவில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள குளத்தில் புனித நீராடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் லைக் செய்து உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல நடிகர், நடிகைகளும் உள்ளூர் கோயில்களிலேயே சிவராத்திரி விழாவை கொண்டாடிய நிலையில் அமலாபாலோ இந்தோனேசியா சென்று அங்குள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி விழாவை கொண்டாடியிருக்கிறார்.