லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்தைத் தொடர்ந்து இன்னொரு கேரக்டரில் நடிக்கிறார் அபிராமி வெங்கடாசலம். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்த அபிராமி வெங்கடாச்சலம், சிவராத்திரி அன்று காளகஸ்திக்கு செல்லும் போது சாலையில் அதிரடி நடனமாடிய ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருந்தார். அதையடுத்து தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாவில் நடராஜரின் உருவப்படத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்தியிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் அபிராமி. அதோடு பக்தி குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். என்னுடைய சிவனை எங்கே வைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும்
மாசில் வீணையும்,
மாலை மதியமும்,
வீசு தென்றலும்,
வீங்கிள வேனிலும்,
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே
என்ற ஒரு சிவன் பாடலையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.