'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது | இளையராஜா இசையில் பாடிய முதல் பாடல்: பாடகி நித்யஸ்ரீ மகிழ்ச்சி | வினோத நோய் : கரண் ஜோகர் விளக்கம் | அமேசான் ஓடிடி தளத்திலும் இனி விளம்பரங்கள் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சாந்தினி படம் | பிளாஷ்பேக் : பூனை கண்ணை மறைக்க லென்ஸ் வைத்து நடித்த சாதனா | பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அன்னக்கிளி, இளையராஜா | ஜெயசூர்யாவின் ஆடு 3 படப்பிடிப்பு துவங்கியது | ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு சத்யராஜ் சொன்ன வார்த்தை ; சிலிர்க்கும் லோகேஷ் கனகராஜ் | கேரளாவில் ரூ.100 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் 'தொடரும்' |
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் சேனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பி.,19) பிற்பகல் 2 மணிக்கு அதர்வா, பிரியா பவானி சங்கர் நடித்த குருதி ஆட்டம் படத்தை ஒளிபரப்புகிறது. இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். ராதாரவி, வத்சன் சக்கரவர்த்தி, வினோத் சாகா, கண்ணா ரவி, பிரகாஷ் ராகவன், பாலஹாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மதுரையில் ஒரு மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை பார்ப்பவர் சக்திவேல் (அதர்வா). கபடி விளையாட்டில் சிறந்து விளங்கும் இவரது அணிக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் காந்திமதியின் (ராதிகா) மகன் முத்துவிற்க்கும் (கண்ணா ரவி) இடையே கபடி விளையாட்டில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த போட்டியே பகையாக மாறி கபடி ஆட்டம் எப்படி குறுதி ஆட்டமாக மாறியது என்பதுதான் படத்தின் கதை.