என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ராஜா ராணி 2 தொடரில் கடந்த ஒருவருடமாக ஹீரோயினாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவரே விலகினாரா? அல்லது வெளியேற்றப்பட்டாரா? என நேயர்கள் பலரும் குழம்பியுள்ளனர். அதேசமயம் ரியாவுக்கு பதில் யார் புதிய சந்தியாவாக நடிக்க போகிறார் எனவும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ஆஷா கவுடா இனி சந்தியாவாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' தொடரின் மூலம் அறிமுகமான ஆஷா கவுடா அந்த தொடரில் நந்தா மாஸ்டருடன் சேர்ந்துகொண்டு 'ஊம் சொல்றியா மாமா' பாடலுக்கு செமயாக ஒரு குத்து குத்தியிருப்பார். அப்போதே இளைஞர் வட்டாரம் ஆஷா கவுடாவிடம் சரண்டராகிவிட்டது. கோகுலத்தில் சீதை தொடர் முடிவுற்ற நிலையில் ஆஷா கவுடா எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகவில்லை. தற்போது அவர் சந்தியாவாக ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதால் அவரது ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.