ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினி. பிரம்மாண்ட திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குவதில் கைதேர்ந்தவர். பின்னர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பெற்றோர் பார்த்த மணமகனை திருமணம் செய்து கொண்டவர், பின்னர் விவாகரத்து செய்து விட்டார்.
சினிமாவில் நடிப்பதிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்த டிடி சில மாதங்களாக எங்கும் தென்படவில்லை. ஏற்கனவே அவருக்கு காலில் பிரச்னை இருந்த நிலையில் இப்போது தனக்கு மூட்டு மாற்று ஆபரேஷன் நடந்திருப்பதாக அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது : கடந்த மூன்று மாதங்களாக எனக்கான நேரத்திற்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடைய மூட்டு மாற்றுக்காக ஒரு சர்ஜரி செய்து கொண்டேன். இது கடந்த பத்து ஆண்டுகளில் என் மூட்டுக்காக நான் செய்து கொண்ட நான்காவது சர்ஜரி. என் வலது காலில் நான் செய்துகொண்ட கடைசி சர்ஜரியாக இது இருக்கும் என நம்புகிறேன், கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் வலி மிகுந்ததாகவே இருக்கிறது.
இத்தனை வருடங்களாக எனக்காக வேண்டிக் கொண்ட, எனக்கு பக்கபலமாக இருந்த மக்களுக்கு என் இதயத்திலிருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். இப்போது ஒரு வெளிச்சம் இருக்கிறது. மிகுந்த பலத்துடன் திரும்பி வருவேன் என உறுதியளிக்கிறேன். என்னுடைய மருத்துவர்களுக்கும், எப்போதும் என் பக்கம் நிற்கும் என்னுடைய குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும் பெரிய நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
கடந்த பத்தாண்டுகளாக என்னை வாழ்த்தி என்னுடன் இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், தயவு செய்து என் அருகில் வந்து ஹாய் சொல்லுங்கள், எத்தனை நல்லுள்ளங்கள் என்னை ஆசீர்வதித்தார்கள் என்று அறிய விரும்புகிறேன். இன்னும் உறுதியாக உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். புதிய மூட்டு! புதிய நான்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.