செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் இறந்து விட்டாலோ, அல்லது விலகி விட்டாலோ, அவர் நடித்த கதாபாத்திரத்தில் இன்னொரு நடிகை நடிப்பார். 'அவருக்கு பதில் இவர்' என்று ஒரு டைட்டில் கார்டோடு அந்த தொடர் ஒளிபரப்பாகும், மக்களும் ரசித்து பார்ப்பார்கள்.
சினிமாவில் இது மிகவும் அபூர்வம். 'பத்ரகாளி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணம் அடைந்து விட்டதால் அவரைப்போன்ற தோற்றம் கொண்ட ஒரு துணை நடிகையை கொண்டு வந்து பின்பக்கமாகவும், தூரமாகவும் அவரை நடிக்க வைத்து அந்த படத்தை முடித்தார்கள்.
ஆனால் இப்படியான நிகழ்வு ஒன்று முறையாக 75 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1949ம் ஆண்டு 'நாட்டியராணி' என்ற படத்தில் நடந்திருக்கிறது. அந்தப் படத்தில் அன்றைய முன்னணி நடிகை, வசுந்தரா தேவி 'சாந்தலா' என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்தார். அவர் நடித்த பல காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அவர் படத்திலிருந்து விலகி விட்டார். அதற்கான காரணம் தெரியவில்லை.
பின்னர் அதே சாந்தலா கேரக்டரில் பி.எஸ்.சரோஜா நடித்தார். கதைப்படி சாந்தலா ஒரு தீவிபத்தில் இறந்து விட்டதாகவும், அவளது ஆவி இன்னொரு பெண்ணின் உடலில் புகுந்து விட்டதாகவும் கதையில் மாற்றம் செய்யப்பட்டு படமானது. மக்களும் இதனை ஏற்றுக் கொண்டார்கள்.