வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
தமிழகம், தமிழர்கள், தமிழ் சினிமா என படத்தில் தமிழ் மீது அதிக ஆர்வம் இருப்பதாகப் பேசிக் கொள்ளும் சில நடிகர்களின் படங்கள் தமிழகத்தையும், தமிழ் சினிமா தொழிலாளர்களையும் புறக்கணித்துவிட்டு ஐதராபாத் போன்ற வெளிமாநில நகரங்களில்தான் அதிகம் நடக்கின்றன.
சில நடிகர்கள், சில கலைஞர்கள் தற்போது சென்னையில் வசிப்பதையும் தவிர்த்துவிட்டு, மும்பை, ஐதராபாத், துபாய் போன்ற இடங்களுக்கு தங்கள் வீடுகளை மாற்றிக் கொண்டும் போயுள்ளனர்.
தமிழ் சினிமா படங்களின் பூஜை அல்லது முதல் நாள் படப்பிடிப்பு பெரும்பாலும் தமிழகத்தில்தான் நடக்கும். சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடக்கும், அல்லது தமிழகத்தில் உள்ள வெளியூர்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்றால் அந்த இடத்திலேயே நடக்கும்.
மற்ற மொழி தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகின்றனர். இங்குள்ள தமிழ் தயாரிப்பாளர்கள் தரும் சம்பளத்தை விடவும் மற்ற மொழி தயாரிப்பாளர்கள் அதிக சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக தங்களது தமிழ்ப் பற்றை தியாகம் செய்யவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
தனுஷ் நடித்து வெளிவர உள்ள 'குபேரா' படத்தின் பூஜை, அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, நேற்றுமுன்தினம் நடந்த சூர்யாவின் 46வது பட பூஜை ஆகியவை ஐதராபாத்தில்தான் நடந்தது.
இது தமிழ்த் திரையுலகினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு நிறுவனங்கள் தயாரிக்கும் தமிழ்ப் படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அங்குள்ளவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்க் கலைஞர்களுக்கு வாய்ப்புகளைத் தருவதில்லை. இங்குள்ள தமிழ்த் தொழிலாளர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது பற்றி படங்களில் நடிக்கும் தமிழ் ஹீரோக்கள் கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.