ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

கடந்த 2020ல் பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் உள்ளதாக பலர் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். இவர் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறி அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சுஷாந்த்துக்கு போதைப் பொருள் வரவழைத்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருட சிறைவாசத்திற்கு பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நான்கு வருடங்களில் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
அவர் மீது வழக்கு இருந்ததால் அவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்று கூறி அவரது பாஸ்போர்ட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரியா சக்கரவர்த்தி வசம் அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து தனது சோசியல் மீடியாவில் ரியா வெளியிட்டுள்ள பதிவில், “கணக்கற்ற போராட்டங்கள்.. முடிவற்ற நம்பிக்கை.. இவற்றை தொடர்ந்து இன்று என்னுடைய பாஸ்போர்ட் மீண்டும் எனது கைகளுக்கு வந்துள்ளது. சாப்டர் 2க்காக தயாராகிறேன். வாய்மையே வெல்லும்” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.