என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் |
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இந்தியாவின் முதல் பார்முலா இ-பிரிக்ஸ் பந்தயம் நடக்கிறது. இதன் துவக்க நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் மற்றும் நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இடையே ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து ராஜமவுலி இயக்கிய ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலின் ஸ்டெப் குறித்து ராம்சரணிடம், ஆனந்த் மகிந்திரா கேட்டார். அப்போது அப்பாடலின் ஸ்டெப்பை ராம்சரண் கற்றுக்கொடுத்தார்.
இது சம்பந்தமான வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‛ஐதராபாத் இ-பிரிக்ஸ் பந்தயம் தவிர்த்து எனக்கு கிடைத்த உண்மையான போனஸ் என்னவென்றால், நாட்டு நாட்டு பாடலுக்கான ஸ்டெப் எப்படி போடுவது? என்பது பற்றி நடிகர் ராம்சரணிடம் இருந்து கற்று கொண்டேன். நன்றி மற்றும் ஆஸ்கார் விருது பெறுவதற்கு வாழ்த்துகள் எனது இனிய நண்பரே!' என தெரிவித்து உள்ளார்.
இதற்கு ராம்சரண் பதிலுக்கு, ‛ஜி என்னை விட விரைவாக ஸ்டெப்களை நீங்கள் போட்டுள்ளீர்கள். உங்களுடன் உரையாடிய அந்த தருணம் மகிழ்ச்சியானது. ஆர்.ஆர்.ஆர். பட குழுவினருக்கு வழங்கிய உங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள்' என தெரிவித்து உள்ளார்.