பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

'யாரடி நீ மோகினி' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர், சமீபத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோரை வைத்து ‛திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை மித்ரன் ஜவஹர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‛திருச்சிற்றம்பலம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, எனது அடுத்தப்படம் திறமையான மற்றும் எனக்கு பிடித்தமான நடிகர் மாதவனுடன். பிரபலமான மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாதவன் - மித்ரன் ஜவஹர் புதிய கூட்டணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.