தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு மாபெரும் நடிகர்களுக்கு இடையில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் ஜெய்சங்கர். 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று போற்றப்பட்டவர். 200 படங்களுக்கு மேல் நடித்த ஜெய்சங்கர் 'முரட்டுக்காளை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி அதன்பிறகு குணசித்ர வேடங்களிலும் நடித்தார்.
எம்ஜிஆர் அழகுடன் ஒப்பிடப்பட்ட ஜெய்சங்கர் அவரைப்போலவே கொடை உள்ளம் கொண்டவராக வாழ்ந்தார். அவரது மகன்களில் மூத்தவரான விஜய் சங்கர் புகழ்பெற்ற கண் மருத்துவராக இருக்கிறார். மகள் சங்கீதாவும் டாக்டராக இருக்கிறார். இளைய மகன் சஞ்சய் சங்கர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாறு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியை அவரது இளையமகன் சஞ்சய் சங்கர் தொடங்கி உள்ளார். ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அடிப்படையில் திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற ஜூலை மாதம் ஜெய்சங்கரின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறார்கள். அப்போது இந்த திட்டம் பற்றி முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.