விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா திருமணம் நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சூர்யகர் என்ற ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்கு ஆசீர்வாதமும் அன்பும் அளிக்க வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஷாகித் கபூர், மிரா ராஜ்புத், கரண் ஜோஹர், இஷா அம்பானி, ஜுகி சாவ்லா உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். சினிமா பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இயக்குனரான விஷ்ணுவர்த்தன் ஹிந்தியில் இயக்கி 2021ல் வெளிவந்த 'ஷெர்ஷா' படத்தில் சித்தார்த், கியாரா இணைந்து நடித்த போது காதலில் விழுந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்திலும், சத்யபிரேம் கி கதா என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். சித்தார்த் 'யோதா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார்.