படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

மராத்தி சினிமாவில் முன்னணியில் இருப்பவர் சோனாலி குல்கர்னி. ஹிர்கனி, விக்டோரியாக என சமீபத்தில் வெளியான படங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
அவர் தற்போது அங்கமாலி டைரிஸ் மற்றும் க்ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அடுத்த படமான 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகிறார். இப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து சோனாலி கூறியதாவது: இது நான் எதிர்பார்க்காத ஒன்று. தென்னிந்திய சினிமாவுக்கு செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். சமீபகாலமாக லிஜோவின் படங்களை கவனித்து வருகிறேன். மோகன்லாலை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகத் தெரியும். இவர்களோடு இணைவது எனக்கு பெரிய கவுரவம்.
சினிமாவின் மாநில எல்லைகள் மறைந்து நாம் அனைவரும் இந்தியத் திரைப்படத் துறையாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்த படம் பீரியட் டிராமா. இதற்காக தற்போது ஒர்க்கவுட் செய்து வருகிறேன். இதுகுறித்து மோகன்லாலிடம் பேசினேன். அவர் மலையாளம் கற்றுக் கொள்ளச் சொன்னார். அதையும் செய்ய இருக்கிறேன். என்றார்.