2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இந்தியத் திரையுலகத்தில் இதுவரை வெளியான படங்களில் இந்திய அளவில் 'பாகுபலி 2' படம் 510 கோடி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த 'கேஜிஎப் 2' படத்தின் வசூலை முறியடித்து அதை பின்னுக்குத் தள்ளி தற்போது 'பதான்' படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
'பதான்' படத்தின் இந்திய வசூல் தற்போது 446 கோடியைத் தாண்டியுள்ளது. 'கேஜிஎப் 2' படத்தின் வசூல் 430 கோடி. 'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்க 'பதான்' படத்திற்கு இன்னமும் 64 கோடி தேவை. அந்த வசூலை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ்ன் நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி உலக அளவில் 'பதான்' படம் 865 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் நிகர வசூலாக 446 கோடியும், மொத்த வசூலாக 536 கோடியும் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் 329 கோடி வசூலைப் பெற்றுள்ளது என அறிவித்துள்ளார்கள்.