லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை ‛எமெர்ஜென்சி' என்ற பெயரில் தயாரித்து, நடித்து, இயக்கி வருகிறார் கங்கனா ரணவத். அது முதல் தனக்கு மிரட்டல் வருவதாகவும், தன்னை யாரோ வேவு பார்க்கிறார்கள் என்றும், எனது தனிப்பட்ட வரவு செலவுகள், தகவல் பரிமாற்றங்கள் கசிந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டி வந்தார் கங்கனா. குறிப்பாக சமீபத்தில் குழந்தை பெற்ற நட்சத்திர தம்பதிகள் இதை செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அவரை பின் தொடர்கிறவர்கள் யார் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கேட்டு வந்தனர். இதற்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். என்னைச் சுற்றி எந்த சந்தேகத்திற்கிடமான செயல்களும் நடைபெறவில்லை. கேமராக்களுடனும், அவை இல்லாமலும் என்னை யாரும் பின்தொடரவில்லை. இருப்பினும், இந்த சதிச்செயலுக்குப் பின்னால் செயல்படுபவர்களுக்கும், என்னை முட்டாளாக நினைப்பவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்களை அடிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தனது சொத்துக்கள் முழுவதையும் அடமானம் வைத்து எமெர்ஜென்சி படத்தை தயாரித்து வருகிறார் கங்கனா. அப்படிப்பட்ட சூழலில் இதுமாதிரியான விஷயங்கள் அவரை மிகுந்த காயமடைய வைத்திருப்பதால் கோபத்தின் வெளிப்பாடாக இப்படி ஒரு பதிவை பதிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.