விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

கடந்த 2020-ல் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டு அதன் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து ஒரு பக்கம் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, இன்னொரு பக்கம் பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து, கடந்த மாதம் சங்கராந்தி பண்டிகையில் ஒன்றாகவே திரையில் வெளியிட்டனர். இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன.
இந்த படங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் படத்தின் இயக்குனர் சித்தாத் ஆனந்தை வைத்து அந்த படத்தை இயக்கவும் அதில் இன்னொரு ஹீரோவாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோசனை அழைத்து வந்து நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 800கோடிக்கு மேல் இந்தப்படம் வசூலித்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சித்தார்த் ஆனந்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக நேரடியாக மும்பைக்கே சென்று அவரை சந்தித்துள்ளனர் மைத்திரி மூவி மேக்கர் நிறுவன தயாரிப்பாளர்கள். மேலும் நடிகர் ஹிருத்திக் ரோஷனையும் சந்தித்து வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மீண்டும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பதாக ஏற்கனவே தாங்கள் திட்டமிட்டு இருந்த படத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளார்கள் என்கிற பேச்சு பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் இதில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்க இருக்கிறார் என்பதையும் இந்த சந்திப்பு உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.