அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இந்தியத் திரைப்படங்களுக்கு அமெரிக்காவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டிலான இந்தியர்கள், அங்கு வேலை பார்க்கச் சென்றுள்ளவர்களால் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது.
இதுவரை வெளியான இந்தியப் படங்களில் தெலுங்குப் படமான 'பாகுபலி 2' படம் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பிடித்து முதலிடத்தில் இருக்கிறது. 14.3 மில்லியன் வசூலைப் பிடித்து இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தை தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளது 'பதான்'. 14.4 மில்லியன் வசூலைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது 'பதான்'.
'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்க நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. வரும் வார இறுதியைக் கடந்த பிறகுதான் அது பற்றி சொல்ல முடியும். ஹிந்திப் படங்களைப் பொறுத்தவரையில் தற்போதைக்கு 'பதான்' தான் அமெரிக்க வசூலில் முதலிடத்தில் உள்ளது. 'தங்கல்' படம் 12.3 மில்லியன் வசூலுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.