கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு படம் ரூ.300 கோடி வசூலைப் பெறவது சாதாரண விஷயமல்ல. கடந்தாண்டு இரண்டு படங்கள் 300 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்திருந்தது. கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள்தான் அவை. 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும், 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலையும் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 600 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அதற்கடுத்து விஜய் நடித்த 'பிகில்' படம் 300 கோடி வசூலைக் கடந்திருந்தது. ரஜினிகாந்தின் 'கபாலி, எந்திரன்' ஆகியவை 300 கோடி வசூலைப் பெற்றதாகவும் தகவல் உண்டு. தற்போது விஜய் நடித்த 'வாரிசு' படம் 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இரண்டு படங்கள் 300 கோடி வசூலைப் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'வாரிசு' படத்துடன் வெளியான 'துணிவு' படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில் 'வாரிசு' படத்தின் 300 கோடி வசூலை நேற்று அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கொண்டாட ஆரம்பித்தனர் விஜய் ரசிகர்கள்.