‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
காமெடி நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛விடுதலை'. வெற்றிமாறன் இயக்கி உள்ளார். சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் விடுதலை படத்திலிருந்து முதல்பாடலாக 'ஒன்னோட நடந்தா' என்ற பாடலை பிப்., 8ம் தேதி வெளியிடுகின்றனர். இதை நடிகர் தனுஷ் பாடி உள்ளார். அவருடன் அனன்யா பட் என்பவரும் பாடி உள்ளார். இதுதொடர்பான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் இளையராஜா இந்த மாதிரி பாடுங்கள் என தனுஷிற்கு சொல்லிக் கொடுக்க அதை அவரும் பிக்கப் செய்து பாடுவது போன்று அந்த வீடியோ உள்ளது.