கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது | நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா |

தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தயாரித்த 'வாரிசு' படத்தைத் தெலுங்கில் டப்பிங் செய்து அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சித்தது குறித்து தெலுங்குத் திரையுலகினல் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். பின்னர் 'வாரிசு' தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' படத்தை சில நாட்கள் தள்ளி வைத்து அவர்களை சமாதானாப்படுத்தினார் தில் ராஜு.
அடுத்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 'கீதா கோவிந்தம்' படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பரசுராம் இணையும் புதிய படத்தைத் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதுதான் இந்த புதிய சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது.
'கீதா கோவிந்தம்' படத்தை அல்லு அர்ஜுனின் அப்பாவான அல்லு அரவிந்த் தெலுங்கில் வெளியிட்டிருந்தார். அப்படத்தின் இயக்குனரான பரசுராமிடம் படம் இயக்க பெரும் தொகை ஒன்றை அட்வான்ஸ் ஆகக் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்குப் படம் பண்ணாமல் திடீரென தில் ராஜுக்கு படம் செய்வதுதான் சர்ச்சைக்குக் காரணம். இது குறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தார் அல்லு அரவிந்த். ஆனால், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்துவிட்டார். பேசித் தீர்த்துக் கொள்ள தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னதால் தற்போதைக்கு சர்ச்சை அடங்கியுள்ளது.




