‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
'சுந்தரபாண்டியன்' படம் வாயிலாக இயக்குனர் ஆனவர் எஸ்.ஆர்.பிரபாகரன். 'சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம் டா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், 'பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ்' என்ற என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 'றெக்கை முளைத்தேன்' என்ற முதல் படத்தை தானே இயக்க உள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதை நாயகியாக நடித்துள்ளார்.
கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், ஜெயப்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா என்ற நான்கு புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார். எஸ்ஆர் பிரபாகரன் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை கதாநாயகர்களை மையப்படுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை. நல்ல கதைகளை தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன் அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குனர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.