எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித்தின் 62வது படத்ததை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்தாண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். 'துணிவு' படம் வெளிவந்த பின் உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த பத்து நாட்களாக படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும் அவருக்குப் பதிலாக மகிழ்திருமேனி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. லண்டனில் உள்ள லைகா அலுவலகத்தில் அதன் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் அஜித், விக்னேஷ் சிவன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தகவல் வந்தது.
இதனிடையே, தன்னுடைய டுவிட்டர் பயோவிலிருந்து 'ஏகே 62' என்ற வார்த்தையை நீக்கியுள்ளார் விக்னேஷ் சிவன், மேலும், தனது புரொபைலில் வைத்திருந்த அஜித் படத்தையும் மாற்றியுள்ளார். 'ஏகே 62' என்பதை நீக்கிவிட்டு தற்போது 'விக்கி 6' என்று சேர்த்துள்ளார். இதன் மூலம் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளது உறுதி ஆகியுள்ளது.
தனது புரொபைலில், “ஒருபோதும் கைவிடாதே…நீங்கள் உண்மையில் செய்ய விரும்புவதைச் செய்ய முயற்சிக்கிறீர்கள்…அன்பும் உத்வேகமும் இருக்கும் இடத்தில் நீங்கள் தவறாகப் போக முடியாது,” என்ற வாசகத்தை சேர்த்துள்ளார்.