சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
இயக்குனர் மாரி செல்வராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படம் சிறந்த படமாக பாராட்டப்பட்டதுடன் அதில் நடித்த கதிர், ஆனந்தி, யோகிபாபு மட்டுமல்லாமல், மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் பெயரை பெற்று தந்தது. அந்த வகையில் அந்த படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நெல்லை தங்கராஜ். கூத்து கலைஞரான இவர் இன்று வயது மூப்பு காரணமாக நெல்லையில் காலமானார்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “ஆங்காரமாய் ஆடியது போதும்.. இளைப்பாருங்கள் அப்பா.. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடு இருக்கும்.. பரியேறும் பெருமாள்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்