பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் நேற்று மாலை 5 மணிக்கு யு-டியுபில் வெளியிடப்பட்டது.
தற்போது வரை இந்த டீசர் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை படம் முடிந்த பின் வெளியாகும் டீசர், டிரைலர்கள் சாதனைகள்தான் கணக்கிடப்பட்டு வந்தது. இனி, டைட்டில் அறிவிப்பு டீசரின் சாதனையையும் கணக்கில் வைத்தாக வேண்டும்.
வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாக 15 மில்லியன் சாதனை என்பது அதிகம்தான். இன்று மாலைக்குள் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்தாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை. 'லியோ' டீசரில் என்னென்ன அம்சங்கள் மறைந்திருக்கிறது என்று 'டீகோட்' செய்து பார்ப்பதற்காகவே பலரும் அதைத் திரும்பத் திரும்பப் பார்த்து வருகிறார்கள்.
'கைதி, விக்ரம்' படங்களின் கதாபாத்திரங்கள் இந்த 'லியோ' படத்திலும் வருமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.




