என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. தற்போது காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. சில தினங்களாக படம் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகின. திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூரலிகான், சாண்டி மாஸ்டர், ஜான் மேத்யு ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த அப்டேட்டை படக்குழுவினர் சற்று முன் வெளியிட்டனர். அதன்படி நாளை(பிப்., 3) மாலை 5மணிக்கு படத்தின் தலைப்பு வெளியாகிறது என அறிவித்து, ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் இருக்கும் கார்ட்டூன் டைப்பிலான போட்டோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.