'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! |
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன், மனோபாலா, மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கதாநாயகியாக திரிஷாவும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற பிப்ரவரி 4ம் தேதி ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுவருகிறது.