ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கு நடிகை மறைந்த விஜய நிர்மலாவின் மகன் நடிகர் நரேஷ். ஒரு விதத்தில் நடிகர் மகேஷ்பாவுக்கும் அண்ணன். கடந்த சில மாதங்களாக நரேஷ், நடிகை பவித்ரா இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். நரேஷுக்கு இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் நடந்து அவர்களை விட்டுப் பிரிந்துள்ளார். நான்காவதாக பவித்ராவைத் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நரேஷ், தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 2010ல் அவரைத் திருமணம் செய்து கொண்டதிலிருந்தே தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நரேஷ். மேலும் தன்னிடமிருந்து 10 கோடி ரூபாயை ரம்யா கேட்பதாகவும் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
தெலுங்கானா நீதிமன்றத்தில் தனக்கு ரம்யாவிடமிருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என்றும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளாராம்.