ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
2023ம் ஆண்டு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிறப்பாகவே ஆரம்பமாகி உள்ளது. விஜய் நடித்து 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' இரண்டு படங்களும் பொங்கல் போட்டியாக வெளியாகிறது. இரண்டு படங்களுமே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிறப்பாக ஓடி வருகிறது.
'வாரிசு' படத்தின் வசூல் 250 கோடியைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 'துணிவு' படத்தின் வசூலைப் பற்றி இதுவரை அப்படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும் நிச்சயம் 175 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு படங்களின் வசூலை சேர்த்து 425 கோடி வசூல் கடந்துள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தியேட்டர்களில் இரண்டு படங்களுக்கும் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் என்பதாலும், அனேகமாக இரண்டு படங்களும் குறிப்பிட்ட வசூலைப் பெற வாய்ப்புள்ளது. 'வாரிசு' குழுவினர் எப்படியும் அடுத்த சில நாட்களில் 275 கோடி என்று அறிவித்து விடுவார்கள். 'துணிவு' குழுவினர் அறிவிக்கவில்லை என்றாலும் ஓட்ட முடிவில் 200 கோடி வசூலைத் தொடலாம் என்கிறார்கள்.
இரண்டு படங்களும் சேர்ந்து 500 கோடி வசூலைத் தொடுமா என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு. அதற்கு வாய்ப்பு குறைவுதான் என்றாலும் ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை சேர்த்தால் அந்தத் தொகை கடந்து விடும் என்பதும் உண்மை. இரண்டு படங்கள் போட்டியுடன் வந்தாலும் இரண்டும் ஓடி முடிக்கும் போது, வாரிசு 300 கோடியும், துணிவு 200 கோடியும் வசூல் நிச்சயம் என்று சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.