உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை | யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் | 'ஜெயிலர் 2' கடைசி கட்ட படப்பிடிப்பு: கேரளா சென்றடைந்தார் ரஜினிகாந்த் | ஆண்டின் தொடக்கம் இப்படி இருக்கிறது; சூப்பர் ஹிட்டுக்காக காத்திருப்பு | தெலுங்கில் 3 பொங்கல் படங்கள் 100 கோடி வசூல் | ‛ஜே.பேபி' இயக்குனருடன் கைகோர்த்த மணிகண்டன் | தொடரும் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த மோகன்லால் : கதாநாயகியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின் |

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பின் பல தமிழ்ப் படங்கள், தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதன் பின் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவைக் காதலிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இருவரும் சேர்ந்து காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று பூஜை எல்லாம் கூட செய்தார்கள். ஆனால், சமந்தா, நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு பின் அவரை விட்டும் பிரிந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வந்தது திரையுலகத்தில் கிசுகிசுவைக் கிளப்பியது. சென்னையில் நடந்த 'பொன்னியின் செல்வன்' விழாவில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதிதியும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்தான்.
நேற்று தெலுங்கு நடிகர் சர்வானந்த்திற்கு ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் சித்தார்த், அதிதி இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர். 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் சித்தார்த், அதிதி சேர்ந்து நடித்த போது காதலிக்க ஆரம்பித்தார்கள் என்கிறது தெலுங்கு வட்டாரம். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




