கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சென்னை : மது, சிகரெட், அசைவம் மூன்றையும் நீண்ட காலம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்தானவை. இவற்றில் இருந்து என்னை விடுவித்து அன்பால் நல்வழிபடுத்தியவர் என் மனைவி லதா தான் என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
சென்னையில் நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் 'சாருகேசி' நாடகத்தின் 50வது நாள் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் ரஜினி பேசியதாவது :
73 வயதிலும் நான் இப்போது ஆரோக்கியமாக இருக்க காரணம் என் மனைவி தான். கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்க வழக்கம் என்று இருந்தேன். நான் கண்டக்டர் ஆக இருந்தபோது இரண்டு வேளையும் நான் வெஜ் தான். மிட்நைட்டில் தண்ணி போடுவது, சிகரெட் எத்தனை பாக்கெட் போகும் என்றே தெரியாது. கண்டக்டர் ஆக இருந்தபோதே அப்படி இருந்தேன் என்றால் பெயர் புகழ் வரும் போது எப்படி இருந்து இருப்பேன். காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65, வெஜிடேரியனை பார்த்தால் பாவமாய் இருக்கும். நானே பல பேரிடம் இதை எப்படி சாப்பிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
மது, சிகரெட், நான் வெஜ் இவை மூன்றும் மிகவும் மோசமானவை. இந்த மூன்றையும் நீண்ட காலமாக அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டவர்கள் எனக்கு தெரிந்து 60 வயதை கடந்து வாழ்வதே இல்லை. இதற்கு நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். அதை என் வாயால் சொல்ல விரும்பவில்லை. அப்படி இருந்த என்னை அன்பாலேயே மாட்டியவர் என் மனைவி லதா.
இதுமாதிரியான பழக்கத்தை உடையவர்கள் உடனடியாக விட்டுவிட முடியாது. இருப்பினும் அன்பால் என்னை அவர் மாற்றினார். உரிய மருத்துவர்களை அழைத்து வந்து அறிவுரை கொடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு ரஜினி கூறினார்.