மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
கடந்த, 1984ல் தாயம் என்ற கதையை மையமாக வைத்து ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார் கமல்ஹாசன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டியிருப்பார் கமல். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் என்றாலும், கமலின், டச்தான் படம் முழுதும் இருக்கும். மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன், சரத்பாபு, அனுஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. தயாரிப்பாளர் தாணு முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் ஆளவந்தான் படத்தை தாணு விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் . உலகம் உழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.