‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
விஜய் ஆண்டனி நடித்த ‛பிச்சைக்காரன்' படம் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதோடு இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்தவாரம் நடந்தது. அப்போது அங்கு நிகழ்ந்த விபத்தில் விஜய் ஆண்டனி காயமடைந்தார். அங்கு ஓரிரு நாள் சிகிச்சை பெற்றவர் அதன்பின் சென்னை வந்தார். தற்போது இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கிடையே இவரது உடல்நிலை பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரவின.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து கட்டை விரலை உயர்த்தி காட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மலேசியாவில் நடந்த விபத்தில் தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி வருகிறேன். விரைவில் உங்களிடம் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.