டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். கடந்த ஏழு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார். ஏழு வருடங்களாக அல்போன்ஸ் புத்ரன் படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தப்படம் ஏமாற்றத்தையே தந்தது. அதனால் அவருடைய ரசிகர்களே இந்த படத்தைப் பற்றி கிண்டல் அடிக்கும் விதமாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் அமைதியாக பொறுமையாக பதில் சொல்லி வந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், தொடர்ந்து நெட்டிசன்களின் கிண்டல்கள் அதிகமாகி வந்ததால் கோபமடைந்து, நான் உங்கள் அடிமை இல்லை.. என்னை விமர்சிக்கும் உரிமையும் உங்களுக்கு நான் தரவில்லை என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது, “நீங்கள் என்னை பற்றியும் என்னுடைய கோல்டு திரைப்படம் பற்றியும் உங்களை திருப்தி படுத்தவில்லை என்கிற காரணத்திற்காக கிண்டலடிப்பது உங்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை.. அதனால், நான் தற்போது எனது முகத்தை காட்டாமல் இணையதளத்தில் என் எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன். நான் உங்கள் அடிமை இல்லை.. அது மட்டுமல்ல, பொதுவெளியில் என்னை கிண்டல் அடிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் எந்த உரிமையையும் நான் உங்களுக்கு கொடுக்கவில்லை.
உங்களுக்கு பிடித்திருந்தால் என்னுடைய படங்களை பாருங்கள்.. மேலும் என்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வந்து உங்களுடைய கோபத்தை காட்டாதீர்கள். தொடர்ந்து இதே போல் செய்தால் நான் இணையதளத்தை விட்டு மறைந்து விடுவேன். முன்பு இருந்ததைப் போல நான் இப்போது இல்லை.. நான் எனக்கும், என்னுடைய குடும்பத்தாருக்கும், நான் கீழே விழும்போதெல்லாம் என்னை தாங்கி பிடித்து உறுதுணையாக இருப்பவர்களுக்கும் உண்மையாக இருக்க விரும்புகிறேன் அதேசமயம் நான் கீழே விழும் போது யார் தங்களுடைய முகத்தில் சிரிப்பை காட்டுகிறார்களோ அவர்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்.. யாரும் திட்டமிட்டு கீழே விழுவது இல்லை.. இயற்கையால் அது நடக்கிறது. அதேபோன்று இயற்கையே எனக்கு ஆதரவளித்து என்னை பாதுகாக்கும்” என்று கூறியுள்ளார்.