Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

குடியரசு தினத்தை அவமதித்ததாக நடிகை ரச்சிதா ராம் மீது வழக்கு பதிவு

22 ஜன, 2023 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Actress-Rachita-ram

மாண்டியா : குடியரசு தினத்தை அவமதித்ததாக நடிகை ரச்சிதா ராம் மீது மத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் தர்ஷன், ரவிசந்திரன், நடிகை ரச்சிதா ராம் ஆகியோர் நடித்த கிராந்தி திரைப்படம், வரும் 26ம் தேதி குடியரசு தினம் அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய அவர், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை மறந்து விடுங்கள். 'கிராந்தி' யோத்வசாவை கொண்டாடுங்கள்' என பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, கர்நாடக மாநில அறிவியல் அராய்ச்சி கவுன்சில் தலைவர் சிவலிங்கய்யா, மத்துார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில், 'இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிறது. நம் நாட்டின் அரசியல் சாசனம் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரச்சிதா ராம், 'குடியரசு தினத்தை மறந்துவிட்டு, 'கிராந்தி'யை கொண்டாட வேண்டும்' என, பேசியுள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிரான வெளிப்படையான அறிக்கையானது, அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, அவரை நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பண்ணை வீட்டில் அபூர்வ வெளிநாட்டு பறவைகள் மீட்பு : கன்னட நடிகர் தர்ஷன் மீது வழக்கு பதிவுபண்ணை வீட்டில் அபூர்வ வெளிநாட்டு ... நான் உங்கள் அடிமை இல்லை; ரசிகர்களிடம் அல்போன்ஸ் புத்திரன் காட்டம் நான் உங்கள் அடிமை இல்லை; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
25 ஜன, 2023 - 17:10 Report Abuse
Watcha Mohideen எந்த நாட்டுக்கப்பா நாடுகடத்தப்போறீங்க....கைலாசவுக்கு மட்டும் தான் முடியும்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 ஜன, 2023 - 02:09 Report Abuse
LAX சபாஷ்.. சரியான நடவடிக்கை.. இதுபோன்ற அதிமேதாவி?? சினிமா கூத்தாடிகள் தமிழிலும்.. தமிழகத்திலும் உள்ளன.. தனக்குத்தானே.. 'நாட்டை விட்டு ஓடிட்றேன்' னு சொன்னதெல்லாம், தத்து பித்து னு பெனாத்திக்கிட்டு தமிழகத்துல இருக்கு.. கேட்டா கருத்து சுதந்திரமாம்.. எல்லாத்துக்கும் சாட்டையை சுழற்றணும்.. அப்பதான் சரிப்படும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in