ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் 10 ஆண்டுகளில் நேரம், பிரேமம் சமீபத்தில் வெளியான பிரித்விராஜ், நயன்தாரா நடித்த கோல்டு என வெறும் மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது ரசிகர்களுடன் உரையாடும் அல்போன்ஸ் புத்ரனிடம் சமீபத்தில் ஒரு ரசிகர், அஜித்தை வைத்து நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்டார்.
அதற்கு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அல்போன்ஸ் புத்ரன், “10 ஆண்டுகளுக்கு மேலாக அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்து வருகிறேன். இதுவரை எட்டு முறை சந்திக்கும் முயற்சியை எடுத்து கை கூடாமல் போனது. எனது பிரேமம் படம் வெளியானபோது படத்தின் நாயகன் நிவின்பாலியை போனில் தொடர்பு கொண்டு அஜித் பாராட்டினார்.
அப்படி அவரது பாராட்டை கூட இன்னொருவர் மூலமாக கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அஜித்தின் மேலாளர் உள்ளிட்ட இன்னும் அஜித்துக்கு நெருக்கமான சிலர் மூலமாக இப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். எனக்கு வயதாவதற்குள் எப்படியாவது அஜித்தை சந்தித்து விடவேண்டும்.. எனக்கு அஜித் படத்தை மட்டுமல்ல கமல், விஜய் ஆகியோரின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கு குறையாமல் ஓடும் படமாக அது இருக்கும் என்று கூறியுள்ளார்.