போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துளள 'வாரிசு' படம் தமிழில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் முன்பதிவு சிறப்பாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பிரஸ்மீட் இன்று(ஜன., 12) மாலை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில் விஜய் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்து இதுவரையில் தெலுங்கில் டப்பிங் ஆன படங்களுக்காக அவர் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொண்டதில்லை.
ஆனால், 'வாரசுடு' பட வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அடுத்து நடக்க உள்ள பிரஸ்மீட்டில் விஜய் கலந்து கொள்வார் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இருவருமே தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தெலுங்கிலும் படம் நன்றாக ஓட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
நேற்று சென்னையில் அதிகாலை காட்சியில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி பைடிபள்ளி அதன் பின் நடிகர் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளனர். அதனால், இன்றைய ஐதராபாத் பிரஸ்மீட்டில் விஜய் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.