ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி | அப்பா- அம்மாவின் பிடிவாதம் ஏற்படுத்திய பாதிப்பு! - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்! | கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது! | அமரன் லுக்கில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிவகார்த்திகேயன் | துல்கர் சல்மானுக்கு முதல் ரூ.100 கோடி வசூலை தந்த லக்கி பாஸ்கர் | தமிழில் அடுத்த 'உண்மையான பான் இந்தியா' எப்போது? | மாதுரி தீட்சித் உடன் நடனமாடியது பெருமை - வித்யாபாலன் | 'கங்குவா' போல சில கதைகள் உள்ளன: இயக்குனர் சிவா ஆர்வம் | சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார் | ''குற்ற உணர்வால் எடுத்த முடிவு.. 10 ஆண்டுகளே நடிப்பேன்'': அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி |
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் அதிகாலை காட்சிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாலை 4 மணிக்கு, 5 மணிக்கு அந்த காட்சிகள் ரசிகர்களுக்கான காட்சிகள் என்ற பெயரில் 500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணங்களை வசூலித்து நடத்தப்படுகின்றன. அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாகவே வசூலிக்கப்படுகின்றன.
மோதல் சம்பவம்
சில சமயங்களில் அதிகாலை காட்சிகளுக்கு பதிலாக நள்ளிரவு காட்சிகளும் நடக்கின்றன. அப்படித்தான் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்த 'துணிவு' படத்தின் காட்சி நடைபெற்றது. அதன்பின் அதிகாலை 4 மணிக்கு விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் காட்சி நடைபெற்றது. நேற்றைய அதிகாலை காட்சிகளில் இருவரது ரசிகர்களுக்கும் இடையில் பல மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு தியேட்டரில் இரு ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பிரச்னையாக மாறியது. தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பேனர்கள், கட்-அவுட்டுகள் கிழிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் அந்த நேரங்களில் சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறை, அப்படிப்பட்ட ரசிகர்களின் தேவையற்ற மோதலைத் தவிர்க்க நேற்று அதிக அளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு தொடர்புடைய ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இரண்டு படங்களையும் வெளியிடுவதால்தான் இப்படியான நள்ளிரவு, அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கிறது. அவர்கள் வெளியிடாத படங்களுக்கு இப்படியான காட்சிகளை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இருக்கிறது என்கிறார்கள்.
உயிர் பலி
நேற்றைய ரசிகர் கொண்டாட்டங்களின் உச்சமாக சென்னையைச் சேர்ந்த 19 வயதே ஆன இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞரின் உறவினர்களும், நண்பர்களும் பேசியதைப் பார்க்கும் போது அவ்வளவு வருத்தம் வந்தாலும் மற்றொரு பக்கம் கோபமும் வருகிறது.
கண்டு கொள்ளாத நடிகர்கள்
நேற்று ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களை வேண்டுமென்றே வெளியிட்டு ஏட்டிக்குப் போட்டியாக இப்படி ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தை அரங்கேற்ற இரு நடிகர்களுக்குமே மறைமுகமான பங்கு உண்டு. நேற்று உயிரிழந்து ரசிகருக்காக சம்பந்தப்பட்ட நடிகர் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை. தங்களது அபிமான நடிகர்களை தங்களது பெற்றோர்களை விடவும் கொண்டாடும் இளைஞர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களது சினிமா மோகம் இருக்கிறது.
சினிமா தியேட்டர்களின் வேலை நேரங்களாக காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. இப்படி நள்ளிரவு, அதிகாலை காட்சிகளில் தங்களது தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு கொண்டாட்டம் செய்யும் போது உடல் சோர்வு காரணமாக விபத்துக்களும், ஏன் உயிரிழப்புகளும் நடக்கவும் வாய்ப்புள்ளது என டாக்டர்களும் தெரிவிக்கிறார்கள். அப்படி ஒரு உயிரிழப்பு சம்பவம்தான் நேற்று நடந்துள்ளது.
தடை வருமா
சினிமா ஹீரோக்கள் அவர்களது ரசிகர்களுக்கு தகுந்த அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று நேற்று இறந்த இளைஞரின் சித்தி மற்றும் நண்பர்கள் பேசிய வீடியோவை சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் பார்த்திருந்தால் இனிமேலாவது தங்களது படங்களுக்கு அதிகாலை காட்சிகள் வேண்டாம் என்று சொல்வார்கள்.
பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இப்படிப்பட்ட நள்ளிரவு, அதிகாலை காட்சிகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. தமிழக அரசு இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மீண்டும் ஒரு உயிர்ப்பலி நடக்காமல் தடுக்குமா என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.