அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
முன்னணி நடிகையாக இருக்கும்போதே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. அவர் நடிக்க வேண்டிய சில படங்களில் இருந்து விலகி இருக்கிறார். அவரும் முழு ஓய்வெடுக்க முடிவு செய்திருந்தார், இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அண்மையில் அவர் ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க மும்பை சென்றபோது அவர் கையில் ஜெபமாலை இருந்தது. அதன் பிறகு அவர் ஐதராபாத்தில் சாகுந்தலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோதும் அவர் கையில் ஜெபமாலை வைத்திருந்தார்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். என்றாலும் அதில் அதிக ஈடுபாடு இல்லாதவராக இருந்தார். புத்தாண்டு, கிறிஸ்மஸ் தினங்களில் மட்டும் தேவாலயத்திற்கு சென்று வந்தார். தற்போது மன அமைதி வேண்டியும், உடல் ஆரோக்கியம் வேண்டியும் எப்போதும் பிரார்த்தனை செய்து வருகிறார். அதனால் ஜெபமாலையை எப்போதும் கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.