ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்த டிரைலர்களில் யு டியுபில் அதிகப் பார்வைகளைப் பெற்று விஜய் நடித்த 'பீஸ்ட்' டிரைலர் முதலிடத்தில் உள்ளது. அந்த டிரைலருக்கு இதுவரையில் 60 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. அந்த சாதனையை தற்போது அஜித் நடித்துள்ள 'துணிவு' டிரைலர் முறியடிக்கப் போகிறது. 'துணிவு' டிரைலர் 59 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. இன்னும் சில லட்சங்கள் பார்வைகளைப் பெற்றால் அந்த சாதனை நிகழ்ந்துவிடும்.
அதே சமயம் விஜய் நடித்துள்ள 'வாரிசு' டிரைலர் தற்போது 41 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'துணிவு' டிரைலர் 60 மில்லியன் பார்வைகளை ஓரிரு நாட்களில் கடந்துவிட வாய்ப்புள்ளது. அந்த சாதனையை முறியடிக்க 'வாரிசு' டிரைலருக்கு மேலும் 20 மில்லியன் பார்வைகள் தேவைப்படும். நாளை படம் வெளிவந்த பின்பு டிரைலரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே, 'துணிவு' டிரைலர் நம்பர் 1 இடத்தில் சில காலம் நீடிக்கும்.
தற்போதைய பொங்கல் போட்டியில் 'வாரிசு' படத்தைக் காட்டிலும் 'துணிவு' படம் பல விதங்களில் முன்னணியில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.