கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
2023ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் பெரும் வெளியீடாக நாளை அஜித் நடித்துள்ள 'துணிவு', விஜய் நடித்துள்ள 'வாரிசு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இரண்டு படங்களில் 'வாரிசு' படத்திற்கு மட்டுமே இசை வெளியீட்டு நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார்கள். விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அந்த நிகழ்ச்சியை டிவியிலும் ஒளிபரப்பு செய்தார்கள். நேற்று ஐதராபாத்தில் தெலுங்கு வெளியீடு பற்றி பிரஸ் மீட்டையும் நடத்தினார்கள்.
ஆனால், 'துணிவு' படத்திற்காக எந்த ஒரு இசை வெளியீட்டு நிகழ்ச்சியும், பிரஸ் மீட்டும் நடத்தவேயில்லை. படத்தின் இயக்குனர் வினோத், கதாநாயகி மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் சில வீடியோ பேட்டிகளை மட்டுமே கொடுத்தார்கள். அவை மட்டும்தான் படத்திற்கான புரமோஷனாக அமைந்தது. இந்நிலையில் 'வாரிசு' படத்தின் அளவிற்கு 'துணிவு' படத்தின் முன்பதிவும் நடப்பது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தனது ரசிக மன்றங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கலைத்துவிட்டார் அஜித். ஆனால், விஜய் சமீபத்தில் கூட அவரது மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
ரசிகர் மன்றம் இல்லாமல், எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல் ஒரு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்குமா என்பது 'துணிவு' படம் மூலம் நடந்து வருவது திரையுலகில் தனி கவனம் பெற்றுள்ளது.