ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். 9 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நாளை ஜனவரி 11ம் தேதி நேரடியாக மோதுகிறார்கள். விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' படங்கள் நாளை வெளியாகின்றன.
9 ஆண்டுகளுக்கு முன்பு 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இருவரது படங்களும் ஜனவரி 10ம் தேதி வெளியானது. விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்' ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளிவந்தது. இப்போது இருப்பதை விட அப்போது அவர்களது வியாபார எல்லை குறைவாகவே இருந்தது. இருந்தாலும் இருவரது படங்களும் நேரடியாக மோதியது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு படங்களுமே வியாபார ரீதியாக சுமாரான வெற்றியைத்தான் பெற்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
கடந்த 9 ஆண்டுகளில் அவர்களது வளர்ச்சி எங்கோ சென்றுவிட்டது. நாளை வெளியாக உள்ள அவர்களது படங்களுக்கான முன்பதிவு அடுத்த ஒரு வாரத்திற்கு நடந்து முடிந்துவிட்டது. இருவரது படங்களுமே ஏட்டிக்குப் போட்டியாக புதிய வசூல் சாதனையைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.