மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நாளை(ஜன., 11) உலகம் முழுவதும் வெளியாக உள்ள படம் 'வாரிசு'. அஜித் நடித்துள்ள 'துணிவு' படமும் இப்படமும் நாளை போட்டி போட்டு வெளியாக உள்ளன.
அதிகாலை சிறப்புக் காட்சியாக இன்று நள்ளிரவு 1 மணிக்கு 'துணிவு' படத்தையும், அதிகாலை 4 மணிக்கு 'வாரிசு' படத்தையும் நடத்த வேண்டுமென இரண்டு படங்களையும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தியேட்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் அதன்படியே சிறப்புக் காட்சிகள் நடைபெறுகின்றன.
நள்ளிரவு 1 மணிக்கே 'துணிவு' காட்சி நடப்பதால் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுக்கள்தான் முதலில் வரும். 'வாரிசு' படம் பற்றிய பேச்சுக்கள் காலை 7 மணிகே வரும். இதனால் 'வாரிசு' குழுவினர் வேறு ஏற்பாட்டை செய்துள்ளனர். இன்று இரவு சினிமா பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சிறப்புக் காட்சியை சென்னையில் நடத்த உள்ளார்கள். அதனால், 'துணிவு' படத்திற்கு முன்பாகவே 'வாரிசு' பற்றிய பேச்சுக்கள் இன்றிரவே வெளியாகிவிடும்.
இந்த விஷயத்தில் 'துணிவு' படத்தை விட 'வாரிசு' படத்தை முந்த வைக்க வேண்டும் என படக்குழுவினர் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளதாகத் தகவல். இந்த மாற்றத்தை 'துணிவு' படத்தை மொத்தமாகவும், 'வாரிசு' படத்தை ஐந்து ஏரியாக்களில் மட்டும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் அனுமதிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.